நடிகையானது என் அதிர்ஷ்டம்: ஸ்ருதிஹாசன்

நடிகர் கமலஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன் தமிழில் ‘7 ஆம் அறிவு’, ‘3’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘பலுபு’ என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். பிரபுதேவா இயக்கும் இந்திப் படத்துக்கும் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.

இந்நிலையில் ஸ்ருதி ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:-

நடிகையானது எனது அதிர்ஷ்டம். ஆனால் சினிமாவில் வெற்றி என்பது என் கையில் இல்லை. ஒரு கதாபாத்திரத்தில் எப்படி நடிக்க வேண்டும் என்று யோசிப்பதும் அதை திறமையாக செய்து முடிப்பதுமே நடிகர்கள் வேலை.

அதேவேளை மிகுதியான நடிப்பை வெளிப்படுத்தினாலும் நன்றாக இருக்காது. எந்த அளவு நடிக்க வேண்டுமோ அந்த அளவோடு நடிக்கிறேன். சித்தார்த்-திரிஷா ஜோடியாக நடித்து தெலுங்கில் வெற்றி பெற்ற ‘நுவ் ஒஸ்தா னன்டே நே நொத்தன் டானா’ படத்தை பிரபுதேவா இந்தியில் ரீமேக் செய்கிறார். இதில் திரிஷா வேடத்தில் நான் நடிக்கிறேன். இது எனக்கு திரில்லிங் ஆக உள்ளது. ஒவ்வொரு படத்தையும் என் முதல் படமாக நினைத்தே நடிக்க ஆரம்பிக்கிறேன். சிறந்த நடிகை என்பதை நிரூபிக்க கிடைத்த அரிய வாய்ப்பாக பிரபுதேவா படத்தை கருதுகிறேன்.

இவ்வாறு ஸ்ருதி கூறினார்.