சகுனி தோல்வி படமா?: கார்த்தி ஆவேசம்

கார்த்தியின் பருத்தி வீரன், பையா, ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, சிறுத்தை படங்கள் வெற்றிகரமாக ஓடின. சமீபத்தில் அவரது சகுனி படம் ரிலீசானது. இந்த படம் எதிர் பார்த்த வசூலை ஈட்டவில்லை என்றும் வெற்றிப் படம்தான் என்றும் இரு கருத்துக்கள் திரையுலகில் நிலவுகிறது.

படம் எல்லா பகுதிகளிலும் நன்றாக ஓடுவதாகவும் விநியோகஸ்தர்கள் லாபம் அடைந்துள்ளதாகவும் கார்த்தி ஏற்கனவே அறிவித்து இருந்தார். ஆனாலும் தொடர்ந்து விமர்சனங்கள் கிளம்பிய வண்ணம் இருந்தன.

மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற கார்த்தியிடம் சகுனி தோல்வி படமா என்று கேட்கப்பட்டது. இதனால் கார்த்தி ஆவேசமானார். அவர் கூறியதாவது:-

சகுனி தற்போதைய அரசியல் சூழலை மையமாக வைத்து தயாரான படம். அதை மக்கள் வரவேற்று உள்ளனர். சகுனி தோல்வி படம் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நன்றாக வசூல் ஈட்டியுள்ளது. சிலர் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யாமல் இருந்து இருக்கலாம். அவர்கள் படத்துக்கு எதிராக பேசுகிறார்கள். வியாபார ரீதியாக சகுனி வெற்றி பெற்றுள்ளது.

இவ்வாறு கார்த்தி கூறினார்.