விஜய்யை இம்ப்ரஸ் செய்ய தயாராகும் கீர்த்தி சுரேஷ்

தற்போதுள்ள இளம் நடிகைகளில் பலரையும் கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.இது என்ன மாயம் படத்தில் அறிமுகமானாலும் ரஜினி முருகன் படத்தின் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமாகிவிட்டார்.தனுஷுடன் தொடரி படத்திலும், சிவகார்த்திகேயனுடன் ரெமோ படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது விஜய்யின் 60வது படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ள இவர் இதில் நல்ல நடிப்பை வெளிப்படுத்த தயாராகி வருகிறாராம்.

விஜய்யுடன் நடிக்கும் காட்சிகளில் ஒரே டேக்கில் நடித்துவிட வேண்டும் என்பதற்காக இயக்குனர் பரதனிடம் வசனங்களை முன்னதாகவே வாங்கி பயிற்சி செய்து பார்க்கிறாராம்.