ஒரு மெல்லிய கோடு – விமர்சனம்

ஒரு மெல்லிய கோடு தமிழில் வெளிவரவிருக்கும் அதிரடித் திரைப்படம். இத்திரைப்படத்தை எ எம் ஆர் ரமேஷ் இயக்க, அர்ஜுன் சர்ஜா, மனிஷா கொய்ராலா மற்றும் ஷாம் ஆகியோர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படம் தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு வருகிறது.

மனிஷா கொய்ராலாவிற்கு சொத்துபத்துகள் ஏராளமாகக் கொட்டிக்கிடக்கையில், அவரை விடச் சிறு வயதினராக, ஷாமை திருமணம் செய்துகொள்கிறார். பாசத்தை அதிகம் காட்டுகின்றேன் என்கிற பெயரில், ஷாமின் எரிச்சல்களுக்கும், வெறுப்புகளுக்கும் ஆளாகிறார் மனிஷா. இதற்கிடையில் ஆஷாவை காதலிக்கத் தொடங்குகிறார் ஷாம், மனிஷாவை போட்டுத்தள்ளிவிட்டு ஆஷாவுடன் சேர்ந்து சந்தோஷமாக வாழ முடிவெடுக்கிறார்.

காதலியின் சொல்லபேச்சினை அப்படியே கேட்டு நடக்கும் ஷாம், நினைத்ததைக் கச்சிதமாக முடிக்கிறார். மனிஷாவும் இறந்துவிடுகிறார். நடந்தது கொலை என்பது தெரியாமலிருக்க சாதுரியமாக மனிஷாவை கொன்றுவிடுகிறார்.

ஆனால், அதேசமயத்தில், இறந்துபோன மனிஷாவின் உடல், மருத்துவமனையிலிருந்து காணாமல் போக, அதன்பின் ஷாமை போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் சென்று விசாரணையைத் தொடங்க, அதன்பின் படத்தில் வரும் காட்சிகள் அனைத்தும் த்ரில்லாகவே தொடர்கிறது. போலீஸ் ஆஃபீசராக அர்ஜுன் வருகிறார். ஒரே இரவில் கதை நடப்பதும், இறுதியில் மனிஷாவின் உடல் கிடைத்ததா? அந்த உடலிற்கு என்ன ஆனது? விசாரணையில் சிக்கிய ஷாம் என்ன ஆனார்? என்பதே படத்தின் விறுவிறுப்பான மீதிக்கதை.