கவர்ச்சிக்கு நோ சொல்லும் முன்னணி நடிகை

இன்றைய தேதியில் தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகை யாரென்றால் அது நயன்தாரா தான். இவரை லேடி சூப்பர்ஸ்டார் என்றே அழைக்கிறார்கள். தெலுங்கில் வெங்கடேஷ் ஜோடியாக இவர் பாபு பங்காரம் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சியாக நடிக்க கேட்பதால் இதன் படப்பிடிப்பை நயன்தாரா தவிர்த்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆரம்பம் படத்துக்கு பிறகு அவர் கவர்ச்சியாக நடிப்பதை தவிர்த்து வருவதும் குறிப்பிடத்தக்கது.