ஆந்திர மார்க்கெட்டை பிடிக்கும் சூர்யா அமலாபால்

பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலா பால் நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் ‘பசங்க 2’. வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் இன்று இப்படம் தெலுங்கில் மீமு எனும் பெயரில் டப் செய்யப்பட்டு அங்கேயும் நல்ல எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆகியுள்ளது. சூர்யா மற்றும் அமலாபாலுக்கு ஆந்திராவிலும் நல்ல மார்கெட் இருப்பது குறிப்பிடத்தக்கது.