ஈழத்து இயக்குனர் துளசிகனின் ரத்தசாசனம்

ஈழத்தின் இயக்குனர் உ.துளசிகனின் ரத்தசாசனம் குறும்படம் 24ம் திகதி யா/குப்பிளான் விக்னேஸ்வரா மகாவித்தியாலய பாடசாலை மண்டபத்தில் வெளியிடப்பட்டது.

ரத்தம் என்ற ஒரு மையக்கருத்தில் ஆரம்பமாகிய குறும்படம் சமகால மக்களின் மனநிலையை இங்கு எடுத்து காட்டி நிற்கும் விதம் வரவேற்கத்தக்கது.

மக்களுக்கு சரியான விழிப்புணர்வு இன்மையே இன்றைய ரத்த தட்டுப்பாட்டுக்கு காரணம் என இயக்குனர் கூற வந்ததை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

வலி தெற்கு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பொன்.சந்திரவேல் தலைமையில் நடைபெற்ற நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தன் கலந்து கொண்டார்.

பிரதம விருந்தினராக வைத்திய அதிகாரி பிராந்திய இரத்த வங்கி, போதனா வைத்தியசாலை தி.விஸ்வேதிதன், சிறப்பு விருந்தினர்களாக வைத்திய அத்தியட்சகர் ஆதார வைத்தியசாலை தெல்லிப்பளை திரு.க.இளங்கோஞானியார்,

தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை வைத்தி அத்தியட்சகர் பிரதீபன், கிருபா லேணர்ஸ் அதிபர் கிருபாகரன், வடமாகாண பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், திரைப்பட இயக்குனர் திரு.கேசவராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.