நிஜ கொலைகளாகும் சீரியல் கொலைகள்

சுவாதியை ரயில் நிலையத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவத்தின் வடு மறைவதற்கு முன்பாகவே அதே பாணியில் பல கொலைகள் நிகழ்ந்திருக்கின்றன.

தமிழகம் முழுவதும் கடந்த வாரங்களில் மட்டும் பல கொலைச்சம்பவங்கள் கூலிப்படையினரால் நிகழ்த்தப்பட்டுள்ளன. டிவி சீரியல்களைப் பார்த்துதான் பல கொலைகள் நடக்கின்றன என்று அரசியல் தலைவர்கள் கூறி வரும் நிலையில் அதற்கு வலு சேர்ப்பது போல பல சீரியல்களில் கூலிப்படையினர் கொலை சம்பவங்களை அரங்கேற்றுவது போல காட்சிகள் அமைக்கப்படுகின்றன.

சன் டிவியில் மட்டுமல்லாது ஜீ தமிழ், கலைஞர் டிவி, வேந்தர் டிவி என பல சேனல்களிலும் ஒளிபரப்பாகும் சீரியல்களிலும் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.