பெயர் நிலைக்க ஆசைப்படும் தொகுப்பாளினி

சினிமா நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பதை போலவே சின்னத்திரை கலைஞர்களுக்கு ரசிகர்கள் உள்ளனர்.இசையருவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய நிஷாவுக்கு ஒரு ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் இதில் மற்றொரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய முரளியை திருமணம் செய்து கொண்டார்.

மானாட மயிலாட நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான முரளி தற்போது பத்தவச்சிட்டியே பரட்டை படத்தில் நடித்து வருகிறார்.நிஷா சொந்தமாக ஒரு ஆடைகள் வடிவமைக்கும் பொட்டிக் வைத்துள்ளார்.

இவரது ஆடைகளை நமிதா பாராட்டியுள்ளாராம். நிஷாவுக்கு இருக்கும் மிகப்பெரிய கனவு என்னவென்றால் சென்னையில் இரண்டுக்கும் மேற்பட்ட ஷுட்டிங் செய்யும் வீடுகளாவது கட்ட வேண்டுமாம்.

அவர் இல்லாவிட்டாலும் பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆசையாம்.