விமானி ஓட்டுனராகும் கார்த்தி

நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘காற்று வெளியிடை’ எனும் படத்தில் விமானி ஓட்டியாக நடித்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு அண்மையில் குன்னூரில் நடந்து முடிந்துள்ளது.

இதைதொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு நாளை முதல் சென்னையில் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரபல நாடக நடிகர் வட்சன் நடராஜன் இப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி ஜோடியாக அதிதி ராவ் நடித்துவரும் இப்படத்துக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார்.