நெடுந்தொடரை தயாரிக்கும் குஷ்பூ

பிரபல சினிமா நடிகையான குஷ்பு, கோடீஸ்வரி நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். பின்னர், ஜாக்பாட், பூவா தலையா, சிம்ப்ளி குஷ்பூ, நினைத்தாலே இனிக்கும் போன்ற நிகழ்ச்சிகளில் சில சேனல்களுக்காக தொகுத்து வழங்கினார். அதோடு, மருமகள், ஜனனி, குங்குமம், கல்கி உள்பட பல தொடர்களிலும் நடித்தார்.

இந்நிலையில், அடுத்தபடியாக அவர் ஒரு சரித்திர தொடரை சன் டிவிக்காக தயாரிக்கப்போகிறாராம். இந்த சேனலில் நீண்டகாலமாக முக்கிய அங்கம் வகித்து வருபவரான ராதிகா நடிப்பில் தற்போது வாணி ராணி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. ஆனால், அடுத்தபடியாக ராதிகாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த நேரத்தில், குஷ்புவின் தொடரை ஒளிபரப்பு செய்து கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாம். அப்படி தான் நடிக்கும் தொடரில் குஷ்பு, பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தயாரிப்பாளராக மட்டும் செயல்படப்போகிறாராம்.