சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரும் சமந்தா

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்திற்கு தற்போது பல நடிகைகள் நடிக்க போட்டிப்போட்டு வருகின்றனர். இந்நிலையில் மோகன் ராஜா இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்கின்றார் என்பது அனைவரும் அறிந்ததே.

இதை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மூன்றாவது முறையாக பொன்ராமுடன் கூட்டணி அமைத்துள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கின்றார்.

இதை படக்குழுவே அதிகாரப்பூர்வமாக தற்போது வெளியிட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இந்த வருட இறுதியில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.