துல்கர் சல்மானுடன் கள்ளத் தொடர்பா? நித்யா மேனன் விளக்கம்

நடிகர் துல்கர் சல்மானுக்கும் தனக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக கூறப்படுவது குறித்து நடிகை நித்யா மேனன் விளக்கம் அளித்துள்ளார்.

நடிகர் மம்மூட்டியின் மகனும், நடிகருமான துல்கர் சல்மான், நித்யா மேனன் ஜோடி அம்சமாக உள்ளதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் நடித்த ஓகே கண்மணி படத்தில் கூட அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது.

இந்நிலையில் நித்யா மேனனுக்கும், துல்கர் சல்மானுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இதனால் துல்கருக்கும், அவரது மனைவி அமல் சுபியாவுக்கும் இடையே பிரச்சனையாக உள்ளது என்று கூறப்பட்டது.

இது குறித்து நித்யாவிடம் கேட்டதற்கு அவர் கூறுகையில், நான் யாருடன் சேர்ந்து நடித்தாலும் அவருடன் எனக்கு தொடர்பு உள்ளது என்று செய்தி வெளியிடுவதே இந்த மீடியாவுக்கு வேலையாகிப் போச்சு. அதனால் இதை எல்லாம் நான் கண்டுகொள்வதே இல்லை என்றா