விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய ஜீ தமிழ்

விஜய் டிவியை டிஆர்பி ரேட்டிங்கில் ஜீ தமிழ் டிவி சேனல் முந்தியுள்ளது என்று சொல்வதெல்லாம் உண்மை புகழ் லட்சுமி ராமகிருஷ்ணன் பதிவிட்டுள்ளார்.

டிவி சேனல்களுக்கு டிஆர்பி ரேட்டிங்தான் நாடித்துடிப்பு. இதை வைத்துதான் விளம்பரங்கள் அதிக அளவில் கிடைக்கும். தமிழ் சேனல்களில் சன்டிவிதான் நம்பர் 1 ஆக டிஆர்பியில் உள்ளது. சன் டிவிக்கு அடுத்த படியாக டாப் 5 சேனல்களில் யார் இடம் பெறுவது என்பதுதான் போட்டி.

கடந் த வாரம் சன் டிவி முதலிடத்திலும் கே டிவி இரண்டாம் இடத்திலும் பார்வையாளர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 3 வது இடத்தில் ஜீ தமிழ் உள்ளது. நான்காவது இடத்தில் விஜய் டிவியும் 5வது இடத்தில் பாலிமர் டிவியும் டிஆர்பி ரேட்டங்கில் இடம் பெற்றுள்ளது.