பெப்பர் டிவியில் எங்க ஏரியா உள்ள வராதே!

“எங்க ஏரியா” நிகழ்ச்சி மூலம் உங்களின் திறமைகளை வெளிக்கொணர வருகிறது பெப்பர்ஸ் டிவி. நேயர்களின் ரசனைக்கேற்ப பல புதிய நிகழ்ச்சிகளை வழங்கி வரும் பெப்பெர்ஸ் தொலைக்காட்சியில் “எங்க ஏரியா” எனும் புத்தம் புது நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமை மாலை 5.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது .

நம்ம ஊரில் திறமைசாலிகளுக்கு பஞ்சமில்லை, ஆனால் அவர்களை உலகிற்கு அடையாளம் காட்ட யாருமில்லை. அப்படிப்பட்ட திறமைசாலிகள் யாராக இருந்தாலும் வயது வரம்பு இல்லாமல் அவர்களின் ஆடல் ,பாடல்,இசை, மிமிக்ரி ,நடிப்பு, மைமிங், மேஜிக் மற்றும் வித்தியாசமான சாகசங்கள் செய்வது போன்ற தனித்திறமைகளை எதுவாக இருப்பினும் அவர்களின் ஏரியாவுக்கே வந்து பதிவு செய்து இதுவரை அவர்களுக்கு மட்டுமே தெரிந்த அவர்கள் திறமைகளை இந்த உலகிற்கு அடையாளம் காட்டும் நிகழ்ச்சிதான் “எங்க ஏரியா”.

இந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் காமெடி கிங் தனசேகர் அவருக்கே உரிய நகைச்சுவை பாணியில் உரையாடுவது தனிச்சிறப்பு பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் திறமைகளைக்காட்ட ஒரு வாய்ப்பு. Peppers TV new program Enga Area இந்நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிறு கிழமை மாலை 5.30 மணிக்கு பெப்பெர்ஸ்தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது