என் தந்தை தான் வலிமையானவர் ஸ்ருதி நெகிழ்ச்சி

தனது தந்தை தான் மிகவும் வலிமையானவர் என நடிகை ஸ்ருதி ஹாஸன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

உலக நாயகன் கமல் ஹாஸனுக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது கிடைத்துள்ளது. இதையடுத்து அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் என ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

4 வயதிலேயே விருது வேட்டையை துவங்கிய கமலுக்கு தற்போது செவாலியே விருது கிடைத்துள்ளது. முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு செவாலியே விருது வழங்கி பிரான்ஸ் அரசு கவுரவித்தது என்பது குறிப்பிடத்தக்கது. என்னடா கமலுக்கு விருது கிடைத்துள்ளது, அவரின் மகள் ஸ்ருதி ஒன்றும் ட்வீட்டவில்லையே என்று எதிர்பார்த்தபோது அவர் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.

அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது, என் தந்தை தான் வலிமையானவர்!!! தடைகளை தாண்டி வருவதில் மற்றும் அதை ஸ்டைலாக செய்வதில்… என்று தெரிவித்துள்ளார்.