தொடரி 3 நாள் வசூல்- வெற்றியா? தோல்வியா?

தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த படம் தொடரி. இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வருகிறது.

இந்நிலையில் இப்படம் தமிழகத்தில் முதல் நாளே ரூ 4.5 கோடி வரை வசூல் செய்ய, இரண்டாவது நாள் ரூ 3.6 கோடி என மொத்தம் ரூ 8.1 கோடி வசூல் செய்தது.

மூன்றாவது நாளான நேற்று வசூல் கொஞ்சம் அதிகரிக்க ரூ 12 கோடியை எட்டியுள்ளது, இன்றும் திரையரங்கில் நல்ல கூட்டம் இருப்பதாக கூறப்படுகின்றது.

இந்த வார முடிவில் உலகம் முழுவதும் எப்படியும் ரூ 20 கோடி இப்படம் வசூல் செய்துவிடும் என தெரிகின்றது.

அடுத்த வாரமும் எந்த தமிழ் படமும் வராததால் படம் ஹிட் வரிசையில் இடம்பிடிக்கும் என கூறுகின்றனர், ஆனால், ஆண்டவன் கட்டளை படத்திற்கு நல்ல விமர்சனம் வருவதால் வசூல் குறையவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.