அடுத்த லெவல் ஹீரோவாகி விட்டடார் ஜெயம்ரவி

தனிஒருவன், பூலோகம், ரோமியோ ஜூலியட் படங்களுக்குப்பிறகு தான் அடுத்த லெவல் ஹீரோவாகி விட்டதாக நினைக்கிறார் ஜெயம்ரவி. அதனால் இதற்கு முன்பு டைரக்டர்களிடம் ஓரளவு கதை கேட்டதும் ஓகே பண்ணி விடுவார். ஆனால் இப்போது ரசிகர்களின் எதிர்பார்ப்பறிந்து கதைகளை செலக்ட் பண்ணி வருகிறார். அதனால் எந்த டைரக்டராக இருந்தாலும் டைட்டீல் தொடங்கி என்ட் கார்டு போடுவது வரை சீன் பை சீன் கதை கேட்டு திருப்தியாக இருந்தால் மட்டுமே நடிக்க சம்மதிக்கிறார். இல்லையேல் கதை பிடிக்கவில்லை என்பதை நேரடியாகவே சொல்லி விடுகிறார். யாரையும் தேவையில்லாமல் அலைய விடுவதில்லை.

மேலும், இப்படி ஜெயம்ரவியிடத்தில் சிலபல மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டி ருந்தபோதும், அவரை தொடர்பு கொள்ளும் சில நிருபர்கள், இன்னமும் நடிகை களுடன் கட்டிப்பிடித்த, முத்தக்காட்சியில் நடித்த அனுபவங்கள் பற்றிதான் அவரிடம் கேள்வி கேட்கிறார்களாம். ஆரம்பத்தில் இந்த மாதிரி கேள்விகளுக்கு சந்தோசமாக பதில் கொடுத்து வந்த ஜெயம்ரவிக்கு இப்போது தன்னிடம் அப்படி கேட்பது பிடிக்கவில்லையாம். அதனால், என்னிடம் பேட்டி எடுக்கும் நிருபர்கள், என்னுடைய வேறு பர்பாமென்ஸ் பற்றி கேள்வி கேளுங்கள். நான் இப்போது வளர்ந்து வரும் நடிகன் இல்லை. வளர்ந்து விட்ட நடிகன். அதனால் இன்னும் மெச்சூரிட்டியான கேள்விகளை கேளுங்கள். நான் பதில் கொடுக்க தயாராக இருக்கிறேன் என்று பத்திரிகையாளர்களிடம் சிரித்தபடியே அன்போடு கேட்டுக்கொண்டு வருகிறார் ஜெயம்ரவி.