இன்று 66-வது பிறந்தநாள்: ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து

இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12-12-1950 அன்று பிறந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பத்திரிகையாளர் சோ ஆகியோரின் மறைவையடுத்து, தனது பிறந்தநாளை கொண்டாடப் போவதில்லை என்று சமீபத்தில் அறிவித்திருந்தார். பெரிய விழாவாக கொண்டாட வேண்டாம் என்று ரசிகர்களையும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், இன்று 66-வது பிறந்தநாள் காணும் நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ‘சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்!, நல்ல ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வாழ்த்துகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், கிரிக்கெட் வீரர் விரேந்திர ஷேவாக் உள்ளிட்ட பல்துறை பிரபலங்களும் ரஜினிகாந்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.