அல்லு அர்ஜூன் முதல் இடம் பிடித்துள்ளார்

டோலிவுட்டின் ஸ்டைல் நாயகன் அல்லு அர்ஜூன், ‛சரைய்னோடு’ படத்தின் வெற்றிக்கு பின்னர் டீஜே படத்தில் நடித்து வருகின்றார். தெலுங்கில் சூப்பர் ஹிட் அடித்த சரைய்னோடு திரைப்படம் மலையாளத்தில் யோதாவ் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டு மலையாள ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பு பெற்றது. கூகுள் வலைதளத்தில் அதிகம் தேடப்பட்ட தெலுங்கு ஹீரோக்களில் அல்லு அர்ஜூன் முதல் இடம் பிடித்துள்ளார்.

அல்லு அர்ஜூனைத் தொடர்ந்து மகேஷ் பாபு, பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், பவன் கல்யாண் உள்ளிட்டோர் முதல் ஐந்து இடங்களை பிடித்துள்ளனர். பெரும்பாலும் பெண் ரசிகைகளை அதிகமாக கொண்டுள்ள அல்லு அர்ஜூன், சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் நேரடி தொடர்பில் உள்ளார். தெலுங்கு நடிகராக மலையாள மற்றும் தமிழக ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ள அல்லு அர்ஜூன் நேரடி தமிழ் திரைப்படம் ஒன்றிலும் விரைவில் நடிக்கவுள்ளார்.