அஜித் நடித்த ப்ளாக் பஸ்டர் படத்தின் இரண்டாம் பாகம் தயார் – சூப்பர் தகவல்!

அஜித் நடிப்பில் அறிமுக இயக்குனர் சரவண சுப்பையா இயக்கத்தில் 2001-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் சிட்டிசன். அந்த சமயத்திலேயே 8 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 14 கோடி வரை வசூல் செய்து அசத்தியது.

மேலும் அஜித்தின் கேரியரில் இன்றுவரை இப்படம் ஒரு மைல்கல்லாக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதை தன்னிடம் தயார் நிலையில் இருப்பதாகவும் அஜித் சம்மதித்தால் அந்த படத்தை இயக்க தயாராக இருப்பதாகவும் இயக்குனர் சரவண சுப்பையா சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.