அரசியல் தலைவர்கள் இடத்தில் அஜித்தை வைக்கும் ‘தல’ ரசிகர்கள்

ஒருபக்கம் ஜெயலலிதாவின் படங்களுக்கு பதிலாக சசிகலாவின் படம் போட்ட 2017ஆம் ஆண்டு காலண்டர்கள் அச்சாகி வருவதாக செய்திகள் வெளிவந்ததை பார்த்தோம். இந்நிலையில் இன்னொரு பக்கம் தல அஜித் ரசிகர்கள், அஜித்தின் விதவிதமான படங்களுடன் கூடிய 2017ஆம் ஆண்டின் காலண்டர்களை அச்சடித்து வருகின்றனர்.

குறிப்பாக திருப்பூர் அஜித் ரசிகர்கள் அதிக அளவில் அஜித்தின் புகைப்படங்களுடன் கூடிய காலண்டர்களை அச்சடித்துள்ளதாகவும் இந்த காலண்டர்கள் மிகவிரைவில் அஜித் ரசிகர்களுக்கு விநியோகம் செய்ய இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது.

2017ஆம் ஆண்டை பொருத்தவரையில் சசிகலா மற்றும் அஜித் படம் போட்ட காலண்டர்கள் மிக அதிக அளவில் அச்சாகி உள்ளதாக அச்சக உரிமையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.