சிங்கம் 3 ரிலீஸ் தள்ளிப்போனது ஏன்? சூர்யா விளக்கம்

 

சூர்யா – ஹரி கூட்டணியில் சிங்கம் படத்தின் மூன்றாம் எஸ்3, தமிழில் சி3 என்ற பெயரில் உருவாகியுள்ளது. சூர்யாவுடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். அதே துரை சிங்கமாக, ஆனால் சர்வதேச குற்றவாளிகளை களையெடுக்கும் அதிகாரியாக சூர்யா நடித்திருக்கிறார். முந்தைய பாகங்களை விட ஆக்ஷ்ன் காட்சிகளும், அனல் பறக்கும் வசனங்களும் சி3யில் கொஞ்சம் தூக்கலாகவே உள்ளது.

சிங்கம்3 படத்தின் படப்பிடிப்புகள் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. ஏற்கனவே இரண்டு முறை தள்ளிப்போன சிங்கம்3, அடுத்தவாரம் டிச.,23-ம் தேதி ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போது அதுவும் தள்ளிபோய் உள்ளது.

சிங்கம் 3 படத்திற்கு சென்சார் போர்ட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல், அதிககட்டணம் வசூல் போன்ற காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிபோய் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் சிங்கம் 3 ஏன் தள்ளிப்போனது என்று சூர்யா தன் டுவிட்டரில் கூறியிருக்கிறார்.

அதில், ‛‛சில தவிர்க்க முடியாத காரணங்களால் எஸ்3 படத்தின் ரிலீஸ் தள்ளிபோய் உள்ளது. இதுவும் நன்மைக்காக என்று நம்பவும், உங்களின் ஆதரவு எப்போதும் தேவை” என்று கூறியுள்ளார்.