இரட்டிப்பு மகிழ்ச்சியில் சிவா ரசிகர்கள் : ட்ரெண்டிங்கில் முதலிடம்

இன்று நடிகர் சிவகார்த்திகேயனின் பிறந்த தினமாகும். இதையொட்டி அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

அவர்களின் வாழ்த்துகளால் சென்னை அளவிலான ட்ரெண்டிங்கில் #HBDPrinceSivaKarthikeyan இடம்பிடித்துள்ளது.

இதன்படி இளவரசர் சிவகார்த்திகேயனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என அவர்களது ரசிகர்கள் அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அத்துடன் சிவகார்த்திகேயனின் 33வது பிறந்த நாளையொட்டி, பொன்ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படத்தின் ஃபர்ஸ் லுக் நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது..

இது இவரின் 12ஆவது படமாக சீமராஜா தலைப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் இருவர் கூட்டணியில் உருவாகும் 3வது திரைப்படமாகும். இந்தப் படத்திற்கு இமான் இசையமைக்கிறார்.