நாச்சியார் – திரைவிமர்சனம்

தமிழ் சினிமாவில் நடிகர்களுக்கும் மட்டும் இல்லை இயக்குனர்களுக்கும் ரசிகர்கள் உண்டு அந்த வகையில் ஒரு சில இயக்குனர்கள் படம் முந்தி அடித்துக்கொண்டு டிக்கெட் வாங்கி படம் பார்க்கும் ரசிகர்கள் உண்டு அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு அப்படியான ரசிகர்கள் உண்டு அவர் படம் என்றால் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் விநியோகிஸ்தர்கள் முதல் திரையரங்க உரிமையாளர்கள் வரை போட்டி போட்டு வாங்குவார்கள் அது பாலா இயக்கத்தில் வெளியான தாரைதப்பட்டை படத்துக்கு பிறகு தலைகீழாக மாறியது காரணம் அந்த படம் ரசிகர்களை மிகவும் வெறுத்த ஒரு படமாக அமைத்தது காரணம் கதைக்களம் முதல் காட்சியமைப்புக்கள் வரை.

பாலாவுக்கு நிச்சய வெற்றி வேண்டும் என்ற நேரத்தில் வெளிவந்துள்ள படம் தான் நாச்சியார் இந்த படம் மூலம் இழந்த ரசிகர்கள் பட்டாளத்தை மீண்டும் பெறுவாரா இல்லை என்ன நடக்க போகிறது என்று பாக்கலாம்

நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார்,ஜோதிகா,இவனா மற்றும் பலர் நடிப்பில் இளையராஜா இசைமழையில் ஈஸ்வரின் ஒளிப்பதிவில் பாலா கதை,திரைக்கதை,வசனம் இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் நாச்சியார்

இவானா (அறிமுகம்) கர்பணி பெண்ணாக இரயில்வே நிலையத்தில் நிற்கின்றார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக இழுத்து செல்ல, அவர்களிடமிருந்து ஜோதிகா அந்த பெண்ணை காப்பாற்றி விசாரணை செய்கின்றார்.

அதை தொடர்ந்து அந்த கர்ப்பத்திற்கு காரணம் ஜிவி தான் என்று அவரை கைது செய்து போலிஸ் விசாரிக்கின்றது. அவரும் தங்களுக்குள் ஏற்பட்ட காதலை ப்ளாஷ்பேக்காக சொல்கின்றார்.

பிறகு தான் ஓர் அதிர்ச்சி காத்திருக்கின்றது. அந்த குழந்தை ஜிவியுடையது இல்லை என்ற பிறகு யார் இந்த பெண்ணை ஏமாற்றினார்கள் என்பதை ஜோதிகா கண்டுப்பிடிப்பதே மீதிக்கதை.

தமிழ் சினிமாவின் சிறந்த நடிகைளில் ஒருவர் என்றால் அது ஜோதிகா என்று சொல்லலாம் இந்த படம் மூலம் மீண்டும் அதை நிரூபித்துள்ளார்.

ஜோதிகா இதுவரை நடித்த அனைத்து படங்களிலும் டாப் 5 லிஸ்ட் எடுத்தால் நாச்சியார் கண்டிப்பாக இடம்பிடிக்கும். முதல் காட்சியிலேயே அடுத்தவர்கள் பைக்கில் இடித்ததற்கு தன் ட்ரைவரை திட்டி, இறங்கி அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் இடத்திலேயே ஜோதிகாவின் கதாபாத்திரத்தை அழுத்தமாக காட்டியுள்ளனர். அதிலும் அவர் ஒவ்வொருவரையும் விசாரிக்கும் காட்சி மிரட்டல்

இதுவரை விடலாய்ப்புள்ள பாத்திரங்களில் விளையாட்டாக நடித்த ஜி.வி பிரகாஷ் முதல் முறையாக நானும் ஒரு நடிகன் என்றும் அதோடு சிறந்த நடிகன் என்று சொல்லும் அளவுக்கு மிகவு அருமையாக நடித்துள்ளார் பாலாவின் பள்ளிக்கூடத்தில் சென்று பட்டைதீட்டப்பட்ட வைரமாக வெளிவந்துள்ளார் என்று சொன்னால் மிகையாகாது அப்படி ஒரு வித்தியாசம் என்று தான் சொல்லணும். ஒரு யதார்த்தமான சென்னைவாசியாகவே வாழ்ந்துள்ளார் .

நாச்சியார் பாலா படமா என்று கேட்கும் அளவில் உள்ளது கத்திக்குத்து வெட்டு துண்டு ரத்தம் சைக்கோத்தனம் எதுவும் இல்லாமல் மிக சிறந்த முறையில் படத்தை கொடுத்துள்ளார் கிளைமாக்ஸ் எப்பவும் போல கொடூரம் இருந்தாலும் கொடூரம் ஆடியன்ஸ் பார்வையில் விசில் பறக்கின்றது. தான் மீண்டும் ஒரு சிறந்த இயக்குனர் என்று நிரூபித்துள்ளார் .

பாலா வசனத்தில் கிடைக்கின்ற கேப்பில் ஸ்கோர் செய்பவர். ‘அட சாமிக்கு போர் அடிக்கும்ல, அதனால் தான் இப்படி சோதனைகளை தருகின்றார், நாம வேனும்னா பிரஷ்ஷா ஒரு சாமிய உருவாக்கலாம்’ என்பது போல் படம் முழுவதும் வசனங்கள் கைத்தட்ட வைக்கின்றது.

ஈஸ்வர் ஒளிப்பதிவில் சென்னை குடிசை பகுதி முதல் குப்பைக்காடுவரை மிகவும் அழகாக காண்பித்துள்ளார் இசை இளையராஜா கதைக்கு என்ன தேவையோ அதை படத்தின் முதல் காட்சி முதல் கடைசிவரை இசை ராஜாங்கம் நடத்தியுள்ளார் .

படத்தின் கதைக்களம் அதோடு பெண்களின் முக்கியத்துவம் எப்படி எல்லாம் கவனமாக இருக்கவேண்டும் என்பதை மிகவும் யதார்த்தனமாக சொல்லி இருக்கிறார் அதோடு படத்தின் இரண்டாம் பாகம் படத்தை மேலும் விறுவிறுப்பை உண்டாக்கியது மேலும் பலம்

மொத்தத்தில் பாலாவின் நாச்சியார் முத்திரை Rank 3.5/5