பரபரப்பாக தளபதி 62 படத்தின் சூட்டிங் : எங்கு தெரியுமா ?

விஜய் முருகதாஸ் கூட்டணியில் வெளியான ‘துப்பாக்கி’, ‘கத்தி’ படங்கள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றன. இப்போது, 3-வது முறையாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார்.

இது அவரது 62-வது படம். விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ‘மெர்சல்’ படத்தை அடுத்து இந்த படத்துக்கும் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார்.

கடந்த மாதம் இதன் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. அப்போது ஒரு பாடல் காட்சி படமானது. பின்னர் மொத்த படக்குழுவும் கொல்கத்தா சென்றது. அங்கு அதிரடி சண்டை காட்சிகளும் வேறுசில காட்சிகளும் படமாகின.

இந்த படத்துக்கு முதல் முறையாக தெலுங்கு பட உலகின் பிரபல ரெட்டையர்கள் ராமன்லட்சுமண் சண்டை காட்சியை அமைத்து வருகிறார்கள். கொல்கத்தாவில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது.

தற்போது காஞ்சிபுரம் அருகே உள்ள ஒரு கல்லூரியில் அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தப்படுகிறது.

அடுத்து படத்தின் முக்கிய காட்சிகள் அமெரிக்காவில் படமாக இருக்கின்றன. அங்கு எடுக்கப்படும் காட்சிகள் தான் படத்தின் மைய கரு என்று கூறப்படுகிறது.

இதற்காக விஜய்-முருகதாஸ் படக்குழுவினர் விரைவில் அமெரிக்கா செல்கிறார்கள்.