விஜயகாந்த் பட டைட்டிலை காப்பியடிக்கும் பிரபு தேவா

“தேவி” படத்தைத் தொடர்ந்து நடன புயல் பிரபு தேவா ”குலேபகாவாலி” படத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்திற்கு பின்பு மீண்டும் ”தேவி” பட இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் ”லட்சுமி” என்ற படத்தில் நடித்து வருகிறார்.

அதனைத் தொடர்ந்து, இவர் ஆகாஷ் சாம் இயக்கும் புதிய படத்தில் கமிட்டாகியுள்ளாராம். இப் படம் பிரபு தேவாவிற்கு சிறந்த படமாக அமையும் என அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இந்நிலையில், தற்போது இந்த படத்தை பற்றி ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது, இப் படத்திற்கு கேப்டன் விஜய்காந்த் நடிப்பில் வெளியான ”ஊமை விழிகள்” என்பதையே டைட்டிலாக வைக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.