அஜித் படத்தை இயக்க மூன்று மெகா ஹிட் இயக்குனர்களுக்குள் கடும் போட்டி

”வீரம்”, ”வேதாளம்”, ”விவேகம்” படத்தைத் தொடர்ந்து மீண்டும் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை சிவாவிற்கே கொடுத்துள்ளார் தல அஜித். ”விஸ்வாசம்” என்ற பெயரில் உருவாகும் இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளது.

மேலும், இப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். முதல் முறையாக அஜித்தின் படத்திற்கு டி.இமான் இசையமைக்க உள்ளார்.

இப் படத்தை அடுத்து தல அஜித் யாருடைய படத்தில் நடிப்பார் என்பது ரசிகர்களின் மனதில் மிக பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.

இதுவரை படமே இயக்கவில்லை: தல அஜித்திற்காக தவமாய் தவமிருக்கும் இயக்குனர்!

அஜித்தின் அடுத்த படத்தை இயக்க மூன்று இயக்குனர் போட்டி போடுவதாக தெரிய வந்துள்ளது. அந்தவகையில், விஜய்யை வைத்து ”போக்கிரி” படத்தை இயக்கிய பிரபு தேவா அஜித்திற்காக ஒரு கதையை உருவாக்கி உள்ளாராம். அந்த கதையும் அஜித்திற்கு பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் விக்னேஷ் சிவனும் அடுத்த படத்தில் அஜித்தை இயக்க முயற்சி செய்து வருவதாக தகவல் வட்டாரங்கள் கூறுகின்றன. அஜித் ரசிகர்கள் அடுத்த படத்தை விஷ்ணு வரதன் தான் இயக்குவார் என கூறி வருகின்றனர்.

மேலும், அவர் சமீபத்தில் இது தொடர்பாக ஒரு சில டிவீட்களை செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.