விஜய் -பிரபுதேவா கூட்டணியின் புதிய படத்தின் டைட்டில்

பிரபல இயக்குனர் விஜய், பிரபுதேவா, தமன்னா நடிப்பில் இயக்கிய ‘தேவி’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து மீண்டும் விஜய் இயக்கத்தில் பிரபுதேவா ஒரு படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருவரும் இணைந்த முந்தைய படத்திற்கு ‘தேவி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு ‘லக்ஷ்மி’ என்று வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் சற்றுமுன் இணையதளங்களில் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று இரவு 9 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்ரம் வேதா’ புகழ் சாம் சிஎஸ் இசையில், நீரவ் ஷா ஒளிப்பதிவில் அந்தோணி படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்திற்கு ஸ்டண்ட் சில்வா ஸ்டண்ட் இயக்குனராக பணிபுரிகின்றார்.