எனக்குதான் அந்த பாக்கியம் கிட்டியது..! இன்ப அதிர்ச்சியில் உள்ள தனுஷ்..!

நடிகர், பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகதன்மை கொண்ட தனுஷ் தனது திறமையால் பல புகழை அடைந்துள்ளார். தமிழ், ஹிந்தி என கலக்கிக் கொண்டியிருக்கும் நடிகர் தனுஷ் ஹலிவுட் படத்திலும் நடிக்கவும் செய்துள்ளார்.

தற்போது, பாலாஜி மோகன் இயக்கத்தில் ‘மாரி 2’ படத்தில் நடிக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் இளையராஜா ஒரு பாடலை பாடியிருக்கிறார். சமீபத்தில் இதற்கான பாடல் பதிவு நடந்ததை தனுஷ் ட்விட்டரில் பகிர்ந்து இருந்தார்.

ட்விட்டரில் ரசிகர் ஒருவர் எப்போது இளையராஜா இசையில் பாடுவீர்கள் என்று கேட்டார், அதற்கான பாக்கியம் இன்னும் கிடைக்கவில்லை என்று கூறிய தனுஷூக்கு இப்போது கிடைத்திருக்கிறது.

இந்நிலையில் தனுஷுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இளையராஜா. மராத்தியில், அமோல் படவ் இயக்கும் ‘பிலிக்கர்’ என்ற படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இதில் தனுஷை ஒரு பாடல் பாட வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் இளையராஜா.