உலகத்தையே தன்பக்கம் பார்க்க வைத்த தமிழன் : இந்த நாள் ஞாபகம் இருக்கா

ஆஸ்கார் விருது என்பது பொதுவாக இந்திய கலைஞர்களுக்கு ஒரு எட்டாத கனியாகத்தான் இருந்தது. சத்யஜித்ரே போன்ற ஒருசிலர் மட்டுமே அந்த விருதை பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் ஒரு தமிழர், ஒன்றல்ல இரண்டு ஆஸ்கார் விருதினை பெற்ற மறக்க முடியாத நாள் இன்று. ஆம், கடந்த 2009ஆம் ஆண்டு இதே பிப்ரவரி 22ஆம் தேதி இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், இரண்டு ஆஸ்கார் விருதுகளை ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற திரைப்படத்திற்காக பெற்ற இனிய நாள்.

இந்த நாளை நினைவுபடுத்தும் வகையில் ரஹ்மானின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இன்னும் ஆஸ்கார் போன்ற பல பெரிய விருதுகளை பெற இந்த இனிய நாளில் அவரை வாழ்த்துவோம்.