கூட்டாளி விமர்சனம்

எஸ் பி பிக்சல்ஸ் சார்பாக பி. பெருமாள் சாமி , எஸ் .சுரேஷ் பாபு இருவரும் தயாரிக்க,சதீஷ் , கிருஷா க்ரூப், கல்யாண், அருள்தாஸ் , அப்புக்குட்டி நடிப்பில் எஸ் கே மதி இயக்கி இருக்கும் படம் கூட்டாளி .

படம் ரசிகனுக்கு கூட்டாளியா? பேசுவோம் .

கடன் வாங்கிக் கார் வாங்கி விட்டு ஒழுங்காக தவணை கட்டாத கார்களை அடியாள் வைத்து தூக்கும் சேட் ஒருவன் கீழ் வேலை செய்யும் நண்பர்கள் சிலர்.

அப்படி வண்டியை பறிகொடுத்த ஓர் அரசியல்வாதி, சேட்டுக்குப் பதில் காரைத் தூக்கிய நண்பர்கள் மீது வஞ்சம் வைக்கிறான் . இப்படியே இவர்களுக்கு பல எதிரிகள் .

நண்பர்களில் ஒருவனான நாயகனுக்கும் (சதீஷ்) , ஒரு கொடுமைக்கார இன்ஸ்பெக்டரின் ( டான்ஸ் மாஸ்டர் கல்யாண் ) மகளுக்கும் (கிரிஷா குரூப்) காதல் வருகிறது .  அது இன்ஸ்பெக்டருக்கு பிடிக்காததால் அவரும் பகையாளி ஆகிறார் .

ஒரு நிலையில் சேட்டு, அரசியல்வாதி , இன்ஸ்பெக்டர் எல்லோருக்கும் நண்பர்கள் பகையாக , நட்பும் காதலும் என்ன ஆனது என்பதே இந்தப் படம் .

பார்த்து சலித்த கதை, அலுத்துப் புளித்த திரைக்கதை . வழக்கமான் கதாபத்திரங்கள் . அடுத்து என்ன வரும் என்பதை எல்லாருமே சொல்ல முடிகிற காட்சிகள் . டெம்ப்ளேட் மேக்கிங்.

யதார்த்தமான – சக நண்பர்கள் மீது பாசம் கொள்ளும் ரவுடியாக வரும் அருள் தாஸ் கதாபாத்திரமும் அருள்தாஸ் நடிப்பும் ஆறுதல்.

கூட்டாளி .. அடுத்த முறை வெல்ல வாழ்த்துகள் !