நாச்சியார் ஒரே இடத்தில் செய்த சாதனை

முன்னணி நாயகர்களின் திரைப்படங்களுக்கு இணையாக பாலா-ஜோதிகாவின் ‘நாச்சியார்’ திரைப்படத்தின் ஓப்பனிங் வசூல் இருந்தது.

இந்த நிலையில் இந்த படம் இரண்டாவது வாரமும் சென்னை உள்பட பெருநகரங்களில் திருப்திகரமான வசூலுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.

இந்த படம் கடந்த வாரயிறுதி நாட்களில் மட்டும் சென்னையில் 18 திரையரங்குகளில் 174 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.46,86,971 வசூல் செய்துள்ளது.

மேலும் திரையரங்குகளில் இரண்டாவது வாரத்திலும் 70% பார்வையாளர்கள் இருந்ததே இந்த படத்தின் வெற்றிக்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படம் சென்னையில் கடந்த இரண்டு வாரங்களில் அதாவது பிப்ரவரி 16 முதல் 25 வரை ரூ.1,97,94,215 வசூல் செய்துள்ளது. ஜோதிகாவின் படம் சென்னையில் முதல் இரண்டு வாரங்களில் ரூ.2 கோடியை நெருங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.