இயக்குனரின் வற்புறுத்தலின் பின்விளைவு : விஷாலுக்கு கலிபோர்னியாவில் சிகிச்சை?

நடிகர் சங்க செயலாளர், தயாரிப்பாளர் சங்க தலைவர் மற்றும் நடிப்பு பணிகள் காரணமாக பிசியாக இருந்த நடிகர் விஷால், சில நாட்கள் ஓய்வுக்கு செல்வதாகவும், ஓய்வுக்கு பின் அடுத்த ஒருசில நாட்களில் அவர் ‘சண்டக்கோழி 2’ படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் சமீபத்தில் செய்திகள் வெளிவந்தது.

ஆனால் கடந்த இரண்டு நாட்களாக விஷால் கலிபோர்னியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

அவரது உடல்நிலை குறித்த சரியான தகவல் இல்லாத நிலையில் விஷாலுக்கு நெருக்கமானவர்கள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு இயக்குனர் பாலா இயக்கிய அவன் இவன்’ என்ற படத்தில் மாறுகண் உள்ள கேரக்டரில் நடிகர் விஷால் நடித்தார்.

அப்போழுது அவர் தன்னுடைய கண்ணை மிகவும் சிரமப்படுத்தி நடித்ததன் விளைவாக கண் மற்றும் மூளைக்கு செல்லும் நரம்பில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், அதன் காரணமாக அவருக்கு அடிக்கடி ஏற்படும் தலைவலிக்கு சிகிச்சை செய்யவே அவர் கலிபோர்னியா சென்றுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காண உலகில் உள்ள ஒரே மருத்துவமனை கலிபோர்னியாவில் தான் உள்ளது என்பதால் அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.