செக்ஸி துர்கா படத்திற்கு யு/ஏ சான்றிதழ் : ட்ரைலர் உள்ளே

சனல்குமார் சசிதரன் இயக்கத்தில் உருவாகி உள்ள மலையாளத் திரைப்படம் “செக்ஸி துர்கா” (எஸ் துர்கா). இப்படம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது.

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் முதலில் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மத்திய தகவல் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தலையீட்டால் கடைசி நேரத்தில் இந்த திரைப்படம் திரையிடப்படவில்லை.

மீண்டும் இந்த படத்தை சென்சார் செய்ய வேண்டும். அதுவரை இந்தப்படம் எந்த விழாக்களிலும் திரையிடக்கூடாது என்றும் விழா குழு கமிட்டி சார்பாக உத்தரவிட்டது.

இதுகுறித்து படத்தின் இயக்குநர் கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு ஆதரவாக தீர்ப்பு அளித்தது. பின்னர் இந்தப்படத்தை சென்சார் குழுவினருக்கு மீண்டும் அனுப்பப்பட்டது. இந்த படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் எந்தவித காட்சிகளும் நீக்கப்படாமல் படத்துக்கு யு/ஏ (U/A) சான்றிதழ் வழங்கி உள்ளனர்.

விரைவில் இப்படம் எப்பொழுது வெளியிடப்படும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.