படத்தை பாத்திட்டு அப்பிடி பேசுங்க..! கீர்த்தி சுரேஷ் ஆவேசம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ், இவர் தற்போது சண்டக்கோழி-2, சாமி-2, தளபதி-62 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் நடிகையர் திலகம் சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதி படத்தில் சாவித்திரியாக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் துல்கர் சல்மான், சமந்தா ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

பழம் பெரும் நடிகையும் சாவித்திரியின் தோழியான ஜமுனா சமீபத்தில் அளித்த பேட்டியில் மகாநதி படத்தில் சாவித்திரியாக நடிக்க கீர்த்தி சுரேஷ் தகுதியானவர் இல்லை என கூறியிருந்தார்.

இதற்கு தற்போது கீர்த்தி சுரேஷ் எதையும் படத்தை பார்த்துட்டு சொல்லுங்கம்மா, நான் நடிப்பதற்கு முன்பு சாவித்திரி அவர்களை பற்றி நன்கு தெரிந்து கொண்டது மட்டுமில்லாமல் அவரது மக்களிடமும் அவரை பற்றி விசாரித்து அதன்படி தான் நடித்து வருகிறேன்.

மேலும் சாவித்திரி அவர்களுக்கு கார் ஓட்டுதல், நீச்சல் ஆகியவற்றில் ஆர்வம் அதிகம், நானும் அப்படி தான் என கூறியுள்ளார்.