சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தில் இசையமைப்பது யார்..! வெளியானது

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘காலா’ மற்றும் ‘2.0’ ஆகிய இரண்டு படங்களும் இவ்வருடத்தில் வெளியாகவுள்ள நிலையில் அவருடைய அடுத்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இதுவரை கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படங்களில் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வந்த நிலையில் இந்த படத்திலும் அவர்தான் இசையமைப்பார் என்று எதிர்பார்க்கபப்ட்டது.

ஆனால் பெரும் ஆச்சரியமாக இந்த படத்திற்கு இளம் இசைப்புயல் அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவ்ல்கள் வெளிவந்துள்ளது.

ரஜினி படத்திற்கு இசையமைப்பது என்பது தனது கனவு என்று பல மேடைகளில் அனிருத் கூறி வந்த நிலையில் தற்போது அவருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ரஜினிகாந்த், கார்த்திக் சுப்புராஜ், சன் பிக்சர்ஸ், அனிருத் என இந்த படத்தின் கூட்டணி வலுவாகி கொண்டே வருவதால் படத்தின் எதிர்பார்ப்பும் அதிகரித்து கொண்டே வருகிறது.