சூப்பர் ஸ்டாரின் காலா டீசர் விமர்சனம்

உலக தமிழர்களின் ஒரே எதிர்பார்ப்பாக இருந்தது காலா டீசர் நேற்று வெளியாக வேண்டியது வெளியாகவில்லை என்று இகவும் ஆவலோடு இருந்த ரசிகர்களுக்கு மிக பெரிய ட்ரீட் ஆகவே அமைத்தது என்று தான் சொல்லணும் காரணம் தலைவர் பேசும் வசனம் ஸ்டைல் புது தலைவர் லுக் புதுசு முக்கியமாக சண்டைகாட்சிகளில் தெறிக்க விட்டு இருக்கும் காலா டீசர் விமர்சனம் பாக்கலாம்

சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் பா.ரஞ்சித் இயக்கிய ‘காலா’ படத்தின் அதிரடியாக நள்ளிரவு வெளியாகி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஸ்டைல், நானா படேகரின் வில்லத்தனத்துடன் கூடிய இந்த டீசரின் பின்னணி இசை ‘கபாலி’ படத்திற்கு இணையாக அட்டகாசமாக உள்ளது.

‘காலா’ என்ன பேருய்யா இது’ என்று நானாபடேகரின் கேள்விக்கு, ‘காலா’ன்னா கருப்பு, காலன், கரிகாலன், சண்டை போட்டு காக்கிறவன்’ என்ற பதில் பின்னணியில் ஒலிக்கின்றது.

இந்த தேசம் சுத்தமா, புனிதமா மாறனும்ன்னு விரும்புறேன்’ என்ற நானா படேகரின் வசனமும், ரஜினியின் ‘கருப்பு உழைப்போட வண்ணம், என் இடத்துல வந்து பாரு, அழுக்கு அத்தனையும் உன்னை மாதிரி இருக்கும்’ என்ற ரஜினியின் வசனமும் ஆடியன்ஸ்களுக்கு கிடைத்த விருந்து. மேலும் ‘ஒத்தையல நிக்கிறேன், தில் இருந்தா மொத்தமா வாங்க, என்று சொடக்கு போட்டு ரஜினி கூப்பிடும் ஸ்டைல், அவரது ரசிகர்களுக்கு கிடைத்த போனஸ்

சந்தோஷ் நாராயணன் இசையில் யோகி பி குரலில், ‘வா உன்னையும் மண்ணையும் வென்று வா நீ… ராதவோர் தேவையைக் கொண்டு வா நீ… ஆயிரம் ஆண்டுகள் போதுமேயுன்…ராகமே மாறுவாய் சீறுவாய்’ என்ற பாடல் ரசிகர்களை விசிலடிக்க செய்யும். இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்தை நீங்க பார்த்தது இல்லைல்ல’ என்று இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்து ரஜினி வசனம் பேசும் ஸ்டைல் நிச்சயமாக வேறு யாருக்கும் வராது.

கச்சிதமான எடிட்டிங், ஆர்ப்பாட்டமான ஒளிப்பதிவு, அதிரடியான பின்னணி இசை , சோஷலிச கருத்துக்களுடன் கூடிய வசனங்கள், எல்லாவற்றிற்கும் மேலாக ரஜினியின் ஸ்டைல் ஆகியவை அடங்கிய இந்த ‘காலா’ டீசர் , படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டினாலும் ஏப்ரல் 27 வரை காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.