மனதைப் பிழியும் சோகம்: காட்டுத்தீ விபத்து குறித்து கமல்

தேனி அருகேயுள்ள மலைப்பகுதியான குரங்கணி காட்டுத்தீ விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளை மீட்க இந்திய விமானப்படை, கமாண்டோ படை, தீயணைப்பு படை மற்றும் உள்ளூர் மக்கள் ஆகியோர் தீவிர முயற்சி எடுத்து வருகின்றனர்.

இந்த தீவிபத்தில் இதுவரை 8 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிவந்துள்ள செய்தி அனைவரையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலியானவர்களுக்கு இரங்கலும், காயமடைந்தவர்களுக்கு ஆறுதலும் பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த விபத்து குறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: கருங்குணி. விபத்து மனதைப் பிழியும் சோகம். பிழைத்தவர் நலம் பெற வேண்டும். மீட்புப் பணியில் ஈடுபடுவோர் அனைவருக்கும் என் வணக்கங்கள். மாண்டவரின் உற்றாருக்கும் உறவினருக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்கள்