அதர்வாவுக்கு ஜோடியாகும் மேயாத மான் நடிகை

நடிகர் அதர்வா தற்போது ‘பூமராங்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அவருடன் மேகா ஆகாஷ் ஜோடியாக நடிக்கிறார்.

இந்நிலையில் மேயாத மான் படத்தில் ஹீரோவுக்கு தங்கையாக நடித்து பிரபலமான நடிகை இந்துஜா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் தான் அவரை இந்த சவாலான வேடத்தில் நடிக்க தேர்ந்தெடுத்தோம் என இயக்குனர் தெரிவித்துள்ளார்.