மீண்டும் தள்ளி போகிறது 2.0? காரணம் இதுதான்

ஷங்கர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் நடிக்கும் 2.0 படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடந்துவருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் VFX காட்சிகளுக்காக பணியாற்றிவந்த ஒரு பிரபல அமெரிக்க நிறுவனம் தற்போது திவாலாகியுள்ளது. அதனால் தற்போது வேறொரு புதிய கம்பெனிக்கு அந்த பணிகளை ஒப்படைக்கலாமா என படக்குழு பரிசீலித்து வருகிறதாம்.

அதனால் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என எதிரிபார்க்கப்பட்ட 2.0 மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் தீபாவளி அல்லது அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.