அவர் அப்பிடித்தான் முதல்முறையாக ரஜினியை விமர்சனம் செய்த கமல்

நடிகர் கமல்ஹாசன் கட்சி தொடங்குவதற்கு முன்பே தனக்கு நெருக்கமான பலரிடம் தெரிவித்து அவர்களிடம் வாழ்த்துக்களும், ஆசியையும் பெற்றார். அவ்வாறு சந்தித்த நபர்களில் ஒருவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினி, கமல் இருவருக்கும் இடையே தொழில்ரீதியில் பலமான போட்டியிருந்தாலும் இருவரும் நட்பை இன்று வரை தொடர்ந்து வருகின்றனர். ஒருவரை ஒருவர் பொதுமேடையிலோ அல்லது தனிப்பட்ட இடத்திலோ விமர்சனம் செய்தது கிடையாது

இந்த நிலையில் இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்த கமல்ஹாசனிடம் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ரஜினி மறுக்கிறாரே என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதில் கூறிய கமல்ஹாசன், காவிரி விவகாரம் என்றில்லை பல விஷயங்களில் அவர் பதில் சொல்ல மறுக்கிறார். அந்த இடத்திலிருந்து நழுவுகிறார்’ என்று கூறியுள்ளார். கமலின் இந்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இருவரும் வெவ்வேறு அரசியல் பாதையில் சென்றாலும் தேர்தல் நேரத்திலோ அல்லது தேர்தல் முடிந்த பின்னரோ இருவரும் கூட்டணி வைக்க வாய்ப்புள்ளதாக கூறப்பட்ட நிலையில் திடீரென கமல்ஹாசன், ரஜினியை நேரடியாக விமர்சனம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.