தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்த விஸ்வாசம் டீம்? – ஏன் தெரியுமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் விஸ்வாசம் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படம் வரும் மார்ச் 23-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதற்காக ஹைதராபாத்தில் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் செட் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்கம் வரும் 16-ம் தேதி முதல் ஸ்ட்ரைக்கில் ஈடுபட உள்ளனர். இதனால் படப்பிடிப்புகள், போஸ்ட் ப்ரொடக்சன் வேலைகள், போஸ்டர் ஓட்டுதல் என படத்தை சார்ந்த எந்த வேலையும் நடக்காது என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த விஸ்வாசம் டீம் தயாரிப்பாளர் சங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. முதல் முறையாக விசுவாசம் படத்திற்கு செட் அமைத்து வருகிறோம். இந்த பணிகளை தொடர அனுமதி கேட்டு தயாரிப்பாளர் சங்கத்திடம் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.

இவர்களின் கோரிக்கையை தயாரிப்பாளர் சங்கம் ஏற்குமா? படத்தின் வேலைகள் தொடருமா? அல்லது ஸ்ட்ரைக்கால் பாதிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.