சத்யராஜின் எச்சரிக்கைக்கு 12 மணி நேரம் மட்டுமே கெடு

சத்யராஜ் நடிப்பில் சர்ஜூன், இயக்கியுள்ள ‘எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையுலகில் நடைபெற்று வரும் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் கதை காலை 6 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடியும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

சத்யராஜ் இந்த படத்தில் ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரியாகவும், வரலட்சுமி மற்றும் கிஷோர் முக்கிய கேரக்டரிலும் நடித்துள்ளனர்.

12 மணி நேர எச்சரிக்கை விடுத்து கடத்தல் கதையாக ஆரம்பிக்கும் இந்த படத்தில் சவுண்ட் டிசைன் ஒரு முக்கியமானதாக கருதபப்டுகிறது

இந்த படத்தின் ரன்னிங் டைம் 120 நிமிடங்கள் மட்டுமே அதாவது வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே இந்த படம் ஓடுகிறது. லட்சுமி மற்றும் மா ஆகிய இரண்டு குறும்படங்களை இயக்கி இணையதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் சர்ஜூன், த்ரில் மற்றும் எமோஷன் காட்சிகள் அடங்கிய ஒரு படத்தை கொடுக்கவிருக்கின்றார்.

இந்த படம் வெளியாகும் முன்பே நயன்தாரா நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.