சிவகார்த்திகேயனை கொண்டாடும் அவரது ரசிகர்கள்- காரணம் உள்ளே

சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர். சினிமாவை தாண்டி மக்களுக்கு ஒரு முன்னோடியாக இருந்து வருகிறார்.

அதற்கு உதாரணமாக உடலுக்கு தீங்கு என்று தெரிந்து நான் சாப்பிடாத ஒரு பொருளை பணத்துக்காக மக்களை நம்ப வைக்க நான் ஏன் விளம்பரங்களில் நடிக்க வேண்டும், அப்படி ஒரு விஷயம் செய்யவே மாட்டேன் என்றார். இது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது.

சில நோய் பிரச்சனையால் சிகிச்சை பெற்றுவரும் குழந்தைகள் சிவகார்த்திகேயனை சந்திக்க விரும்பினார்களாம். அதை கேள்விப்பட்ட அவர் படப்பிடிப்பு வேலைகளால் பிஸியாக இருந்தாலும் அந்த குழந்தைகளை நேரில் சென்று சந்தித்து அவர்களுடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.

அவரின் இந்த அக்கறையை பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனை வாழ்த்தி வருகின்றனர்.