ஸ்ரீ தேவி அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொள்ளாத விஜய் – காரணம் இது தானாம்.!

இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான ஸ்ரீ தேவி இரு வாரங்களுக்கு முன்பு துபாயில் மரணமடைந்தார். சமீபத்தில் இவருக்கு சென்னையில் அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற்றது.

திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு ஸ்ரீ தேவிக்கு அஞ்சலி செலுத்தினர். அஜித் மற்றும் ஷாலினி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் கூட்டத்திற்கு முன்பே போனி கபூர் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறியிருந்தனர்.

மேலும் இந்த கூட்டத்தில் தளபதி விஜய் கலந்து கொள்ளாததால் இது குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். தற்போது அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

வரும் மார்ச் 16-ம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் வேலை நிறுத்தத்தை அறிவித்து இருப்பதால் அதற்குள் தளபதி-62 படத்தின் படப்பிடிப்புகளை முடிந்த அளவிற்கு முடித்து விட வேண்டுமென மும்மராக படப்பிடிப்பு நடந்து வருகிறதாம்.

இந்த நேரத்தில் ஸ்ரீ தேவியின் அஞ்சலி கூட்டத்தில் கலந்து கொண்டால் படக்குழுவினருக்கு கஷ்டமாக இருக்கும் என்பதால் விஜய் கலந்து கொள்ளவில்லையாம்.