நடிகை ஹன்சிகா மீது பரபரப்பு புகார்

நடிகை ஹன்சிகா எங்கேயும் காதல் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு நிறைய முன்னணி நடிகர்களின் படங்களிலும் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

கடைசியாக அவர் நடிப்பில் குலேபகாவலி என்ற படம் வெளியாகி இருந்தது. இப்போதைக்கு அவருக்கு விக்ரம் பிரபு, அதர்வா நடிக்கும் படங்களில் தான் கமிட்டாகி இருக்கிறார்.

இந்த நேரத்தில் அவருடைய மேனேஜர் முனுசாமி தென்னிந்திய நடிகர் சங்கத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். அதில் அவர், இதுவரை பணியாற்றிய படங்களுக்காக ஹன்சிகா எனக்கு சம்பளம் தரவில்லை. எனவே, அதை வாங்கித்தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என கூறியுள்ளார்.