விக்ரம் மகன் படத்தில் எனது மகள்…..! கௌதமி என்ன கூறினார்

சீயான் விக்ரம் மகன் துருவ், இயக்குனர் பாலா இயக்கி வரும் ‘வர்மா’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நேபாளத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த படத்தில் துருவ் ஜோடியாக நடிகை கவுதமியின் மகள் சுப்புலட்சுமி நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்தன. ஆனால் இந்த தகவலை கவுதமி தற்போது மறுத்துள்ளார்.

இதுகுறித்து கவுதமி தனது சமுகவலைத்தளத்தில் கூறியதாவது: ‘என் மகள் நடிக்கப் போவதாக வெளியான செய்திகளைப் பார்த்தேன்.

சுப்புலட்சுமி தற்போது படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் நடிப்பதாக இல்லை. உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி” என அவ்ர் விளக்கம் அளித்துள்ளார்