படுக்கை அழைப்பு குறித்த இலியானாவின் பரபரப்பு பதில்

கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து திரையுலகிலும் நடிகைகள் வாய்ப்புகளுக்காக படுக்கைக்கு அழைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் அவ்வப்போது எழுந்து வருகின்றன.

ஆனால் இந்த விஷயத்தை வெளியே தைரியமாக தெரிவிக்கும் நடிகையின் திரையுலக வாழ்க்கை அடியோடு அஸ்தனமாகிவிடும் என்று நடிகை இலியானா பரபரப்பாக கூறியுள்ளார்

ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த ‘நண்பன்’ உள்பட பல வெற்றி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை இலியானா. இவரிடம் சமீபத்தில் நடிகைகள் படுக்கைக்கு அழைப்பது குறித்த கேள்வி கேட்கப்பட்டபோது அவர் கூறியதாவது.

வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கப்படும் நடிகை, இதனை வெளியே கூறும்போது அவரது கேரியர் முற்றிலும் பாதிக்கப்படுகிறது. இதனாலேயே பல நடிகைகள் இதனை வெளியே சொல்வதில்லை. இது கோழைத்தனம் தான் என்றாலும் இது தான் உண்மை

ஒரு தயாரிப்பாளர் தன்னை படுக்கைக்கு அழைப்பதாக ஒரு நடிகை என்னிடம் கூறி அவரிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்று ஆலோசனை கேட்டார். ஆனால் நான் அவருக்கு எந்தவிதமாக ஆலோசனையையும் கூறவில்லை. அந்த தயாரிப்பாளர் சொல்வதை கேட்பதா, வேண்டாமா என்பதை அவர் தான் முடிவு செய்ய வேண்டும், என் கருத்தை அவரிடம் திணிக்க முடியாது.

பெரிய நடிகர்களுக்கு வெளியே கடவுள் போன்ற இமேஜ் இருந்தாலும் உள்ளே அவர்களுக்கு இன்னொரு முகம் இருக்கின்றது. இந்த முகத்தை வெளியே கொண்டு வர அனைத்து நடிகைகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே முடியும்