பிரமாண்ட முயற்சியை கையில் எடுக்கும் அனிருத்

அனிருத் தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர். இவர் எப்போதும் உச்சத்தில் இருக்கும் நடிகர்களின் படங்களுக்கே தொடர்ந்து இசையமைத்து வருகின்றார்.

தற்போது கூட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அடுத்தப்படத்திற்கு இசை இவர் தான், இந்நிலையில் அனிருத் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சியை விரைவில் நடத்தவுள்ளாராம்.

இந்த நிகழ்ச்சி ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் லண்டன் மற்றும் பாரீஸில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

16-ம் தேதி லண்டனில் உள்ள S S E Wembly Arena என்னுமிடத்திலும், 17-ம் தேதி பாரீஸில் Zenith என்னுமிடத்திலும் நடத்தவுள்ளாராம்.